படிக்கும் போது யார் (ஆசிரியர்) கண்ணிலும் படக் கூடாது என்று பயந்து மறைந்து படித்து முடித்தவுடன் பல்கலைக்கழகமோ பள்ளி பக்கமோ போகும் போது யாராவது (ஆசிரியர்) கண்ணில் பட மாட்டார்களா என எண்ணுபவர்களில் நானும் ஒருத்தி!
செயலால் மனதில் நிறைந்தவன் வல்வெட்டித்துறையில் வாழ்க்கை தொடங்கிய கரிகாலன் இவ்வளவு பெரிய பேரியக்கத்தை எழுப்பிய தலைவன் - இவராயென எதிரியையும் எண்ண செய்த புதிரன் தன் இயக்கத்தில் அனைவர் பற்றியும் அறிந்து அவர்களே அறியா வண்ணம் அவர்கள் குடும்பத்திடம் நலம் செய்தி தரும் கள்வன் வானம் என்ன அவன் அப்பன் வீட்டு சொத்தா? - என கேட்குமிடத்தில் - என்றோ பதில் கூறிவிட்டேன் எனும் கம்பீரமுடையவன் முப்படை அமைத்த தமிழன் - புற முதுகு காட்டாத புறநானூற்று வீரன் பல தமிழர்களை ஒன்றினைத்த தமிழானவன் அனைத்திற்கும் மேல் அவன் உயிரானவன் தலைவன் ஒருவனே தலைவன் ஒருவனே அவன் எம் பிரபாகரனே!
Comments
Post a Comment