வீட்டை விட்டு வெளி வருவதில்லை என அம்மா திட்டுகிறார் எங்களோடு இணைய மாட்டேன் என்கிறாள் என அக்காவும் அவர் பிள்ளைகளும் குற்றம் சாட்டுகின்றனர் அவர்களிடம் எப்படி சொல்வேன் நாளை விடுதி சென்ற பிறகு நேற்றைய இந்நேர நினைவுகள் என்ன செய்தோம் என்ற நினைவுகள் என்னை துரத்துமே என்று! கூறினாலும் நீ சிறு பிள்ளையா? என்பார்கள் வயதிற்கும் மனதிற்கும் என்ன தொடர்பு என கேட்டால் தத்துவம் பேசாதே! என்பார்கள் நம் வாழ்க்கை நமக்கு பிடித்த முறை அன்றி யாரோ விதித்த கட்டுப்பாட்டிற்குள் வளர்ந்து என்ன அவர்கள் கண்டார்கள் ஒன்றுமில்லை? பின் ஏன் இப்படி வாழ சொல்கிறார்கள் அவர்களிடம் பதிலில்லை!
ஒவ்வொரு நாளிலும் இரு செயல்கள் நடைபெறுகின்றன ஒன்றின் விளைவு கண்ணீராகவும் - மற்ற ஒன்றின் விளைவு சிரிப்பாகவும் இடம்பெறுகின்றன கண்ணீரின் விளைவை துன்பம் என்றும் சிரிப்பின் விளைவை இன்பம் என்றும் பெயரிடப்படுகின்றன யாவையும் ஒரே நிகழ்வுகள் தான் ஆனால் இத்தனை பெயர்கள் நிர்ணயித்தது ஒரிரு மனம் தான் ஆம் யாரோ ஒரிரு மனிதர்களின் மனம் தான் தீர்மானித்து இருக்கின்றன இவை தான் இன்பம் துன்பம் என்று!
உன் முதல் முயற்சியே!
ReplyDeleteநட்ப்பை பற்றிய உணர்வலைகளை
வரைத்த என் நட்பே.......🤗
அருமை தோழியே...🤗😍👏
ReplyDelete